உஷார்... தமிழகத்தில் அரிசி, நெல், துவரம் பருப்பு, உளுந்து பதுக்கினால் இனி ஜெயில் தான்... இருப்புக்குப் புதிய உச்சவரம்பு நிர்ணயித்து அரசிதழில் அறிவிப்பு வெளியீடு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான துவரம் பருப்பு, உளுந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவற்றின் விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், செயற்கையான விலையேற்றம் மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்கவும் இருப்பு உச்சவரம்பை  நிர்ணயித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, பிரிவு 3-ன் கீழ், மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக ஆளுநர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்குத் தடையின்றி நியாயமான விலையில் பருப்பு மற்றும் அரிசி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய இருப்பு உச்சவரம்பு கட்டுப்பாடுகள் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதிக அளவில் சரக்குகளைப் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் இருப்பு துவரம் பருப்பு உளுத்தம்பருப்பு அரிசி கையிருப்பு குடோன்

வணிகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் வைத்துக்கொள்ளக்கூடிய துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றின் அதிகபட்ச அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டுள்ளது: ஒவ்வொரு பருப்பு வகைக்கும் (துவரம் பருப்பு மற்றும் உளுந்து தனித்தனியாக) அதிகபட்சமாக 200 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருப்பு வகைக்கும் அதிகபட்சமாக 5 மெட்ரிக் டன் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு சில்லறைக் கடையிலும் ஒவ்வொரு பருப்பு வகைக்கும் 5 மெட்ரிக் டன் வரையும், அவர்களின் பிரத்யேக சேமிப்புக் கிடங்கில் ஒவ்வொரு பருப்பு வகைக்கும் 200 மெட்ரிக் டன் வரையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

கடைசி 3 மாத உற்பத்தி அளவு அல்லது வருடாந்திர நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 25 சதவீதம் — இதில் எது அதிகமோ அந்த அளவுக்கு மட்டுமே இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்பவர்கள், சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது.

பருப்பு வகைகளைப் போலவே நெல் மற்றும் அரிசிக்கும் கடுமையான இருப்பு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன: மொத்த வியாபாரி அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் நெல் அல்லது அரிசியை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். சில்லறை வியாபாரி ஒரு கடைக்கு அதிகபட்சமாக 8 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி உண்டு.

மளிக்கைப் பொருட்கள் பருப்பு

பெரிய சங்கிலித் தொடர் கடைகள் ஒரு கடைக்கு 8 மெட்ரிக் டன் வீதம், மொத்தக் கடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து (8 x மொத்த கடைகளின் எண்ணிக்கை) கணக்கிடப்படும் மெட்ரிக் டன் அளவிற்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. அரிசி ஆலைகள் தங்களது ஆலையின் ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மேல் நெல் மற்றும் அரிசியை இருப்பு வைக்கக் கூடாது.

பதப்படுத்துபவர் மாதாந்திர நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 60 சதவீதம் மற்றும் 2027 ஜனவரி வரை உள்ள மீத மாதங்களைப் பெருக்கி வரும் அளவிற்கு மட்டுமே இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர் சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் சரக்குகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது எனக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டு, நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.