உஷார்... பெங்களூரில் இளம்பெண்ணின் கைகளை பெவி குயிக்கால் ஒட்டி, கத்தி முனையில் கொள்ளை... பதற வைக்கும் வீடியோ!

 
கடை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபர், பெண்ணின் கைகளை ‘பெவிக்விக்’ பசையால் ஒட்ட வைத்து கத்தி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அந்த நபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள காலணி மற்றும் பைகள் பழுதுபார்க்கும் கடையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி காலை இந்தச் சம்பவம் நடந்தது. கடையில் தனியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயது பெண்ணிடம், ஹெல்மெட் மற்றும் கையுறைகள் அணிந்து வந்த பிரபுராஜ் (40) என்பவர் தங்கச் சங்கிலியைக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் கைகளை பெவிக்விக் பசையால் ஒட்ட வைத்து, சுமார் 35 கிராம் எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் பறித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இளம்பெண் உதவி கேட்டு கூச்சலிட்டதும், கொள்ளையன் இளம்பெண்ணைக் கத்தி முனையில் பிடித்துக் கொண்டு, அங்கிருந்த பொதுமக்களை மிரட்டியுள்ளார்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு, போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் கொள்ளையனைப் பிடித்தனர். இந்திரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுராஜைக் கைது செய்தனர். பெண் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு பெரிய காயங்கள் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.