உஷார்... "7 மணி நேரத் தூக்கம் போதுமா?" 2026ல் உலகை ஆளும் 'ஸ்லீப் ஹைஜீன்' (Sleep Hygiene) நுட்பங்கள்!
Mar 17, 2026, 04:40 IST
"நேரம் காலம் இல்லாம போன் பார்த்தா தூக்கம் வராது!" - வீட்டில் பெரியவர்கள் சொல்லும் இந்த வார்த்தை இன்று உலகளாவிய ஆரோக்கிய விதியாக மாறியுள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், தூக்கமின்மை என்பது ஒரு சைலண்ட் கில்லராக உருவெடுத்துள்ளது. நல்ல தூக்கத்திற்கு இந்த சூப்பரான விஷயங்களை கடைபிடித்துப் பாருங்க.

ப்ளூ லைட் கட்-ஆஃப்:
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன் மற்றும் லேப்டாப் பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள். திரையில் இருந்து வரும் நீல ஒளி 'மெலடோனின்' ஹார்மோனைத் தடுத்துத் தூக்கத்தைக் கெடுக்கும்.
10-3-2-1 விதி:
தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் காபி குடிக்காதீர்கள், 3 மணி நேரத்திற்கு முன் உணவு, 2 மணி நேரத்திற்கு முன் வேலை மற்றும் 1 மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

குளிர்ந்த அறை:
அறை வெப்பநிலையை 18°C முதல் 22°C-க்குள் வைத்திருப்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு (Deep Sleep) உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று இரவு இந்த மாற்றங்களைச் செய்து பாருங்கள், நாளை காலை புதிய மனிதரான புத்துணர்ச்சியை உணர்வீங்க.
