உஷார்... குடையோட கிளம்புங்க... அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!
வெளியே கிளம்புவதாக இருந்தால், மறக்காம குடையோட கிளம்புங்க. அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அத்துடன்  தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மிதிலி புயலாக மாறும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி, சென்னை  உட்பட  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம்

இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நம்பவர் 17 ம் தேதி ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. கரையை கடந்த பின்னும்  தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  நவம்பர் 19ம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வானிலை ஆய்வு மையம்
அதனை தொடர்ந்து அடுத்ததாக 20 மற்றும் 21 ம் தேதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அதன் பிறகு மழை அளவு படிப்படியாக குறையும் என  மண்டல வானிலை இயக்க தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மாண்டலம் உருவாகி இருப்பதால்  எண்ணூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உட்பட   9 துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கலாம் . இதனால்  மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web