உஷார்... வீட்டில், பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்!

 
தேசிய கொடி சுதந்திர குடியரசு

இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள், அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக் கொடிச் சட்டத்தின்படி, அனைத்துக் குடிமக்களும் தேசியக் கொடியைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இருப்பினும், தேசியக் கொடியை ஏற்றும்போது அதற்கான சட்ட விதிகளையும் மரியாதையையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கொடியை ஏற்றிய பிறகு காவி நிறம் மேலேயும், பச்சை நிறம் கீழேயும் இருக்க வேண்டும். தவறுதலாகக்கூடத் தலைகீழாக ஏற்றக் கூடாது. பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. காகிதம் அல்லது கையால் நெய்த காதி/துணி கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கிழிந்த, பழுதடைந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது.

தேசியக் கொடியில் கொடி பூக்கள் சுதந்திர குடியரசு

தேசியக் கொடியைச் சிலைகள், நினைவுச் சின்னங்கள் அல்லது வாகனங்களை மூடும் துணியாகப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, இடுப்புக்குக் கீழே ஆடையாகவோ அல்லது கால்சட்டையாகவோ அணிவது சட்டப்படி குற்றமாகும்.

தேசியக் கொடியைச் சூரிய உதயத்திற்குப் பின்னரே ஏற்ற வேண்டும். அதேபோல, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் (மாலை 6 மணிக்குள்) மரியாதையுடன் இறக்கிவிட வேண்டும்.

எக்காள ஒலியுடன் கொடியை விரைவாக ஏற்ற வேண்டும்; ஆனால் இறக்கும் போது மெதுவாகவும் கண்ணியமாகவும் இறக்க வேண்டும்.

குடியரசு

தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும் போது, அதைச் வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். பிற கொடிகள் உடன் இருந்தால், அவை அனைத்திற்கும் முன்னதாகத் தேசியக் கொடியே இருக்க வேண்டும்.

கார்களில் கொடியைப் பறக்கவிட விரும்புவோர், காரின் முன்னால் நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

தேசியக் கொடியை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால், 1971-ஆம் ஆண்டின் தேசியக் கொடி அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். எனவே, கொடியின் பெருமையையும் கண்ணியத்தையும் காப்போம்.