உஷார்.. மகள் கண்முன்னே லிஃப்ட்டில் சிக்கி உயிரிழந்த தாய்.. கதவு திறந்த நிலையில் திடீரென இயங்கியதால் விபரீதம்!

 
லிப்ட்

ஆந்திர மாநிலம் ஒங்கோலில் உள்ள குடியிருப்பு வளாகத்தில், மின்தூக்கி கதவு திறந்த நிலையிலேயே திடீரென இயங்கியதால் அதில் சிக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒங்கோலில் அமைந்துள்ள 'சூர்யா டவர்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த பெண் வனிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேரனுடன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட்டில் பயணம் செய்துள்ளார். குறிப்பிட்ட தளத்தை அடைந்ததும் வனிதாவின் மகளும் பேரனும் லிஃப்ட்டை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறினர். வனிதா வெளியேறுவதற்குள், மின்தூக்கியின் கதவு திறந்திருந்த நிலையிலேயே அது திடீரெனக் கீழ்நோக்கி நகரத் தொடங்கியது.

எதிர்பாராத இந்த அசைவால் பதற்றமடைந்த வனிதா, லிஃப்ட்டில் இருந்து அவசரமாக வெளியேற முயன்றபோது கதவுக்கும் சுவருக்கும் நடுவே சிக்கிப் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.