உஷார்... குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் புதிய ஒமிக்ரான் வைரஸ்... பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

 
அதிர்ச்சி!! அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் மரணம்! மக்கள் பீதி! அதிர்ச்சி!! அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் மரணம்! மக்கள் பீதி!

உலகெங்கிலும் கொரோனா வைரஸின் பல்வேறு உருமாற்றங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ள நிலையில், 'BA.3.2.2' என்ற புதிய ஓமிக்ரான் வகை வைரஸ் குறித்த அதிர்ச்சி தரும் மருத்துவ ஆய்வுத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பயோஆர்கைவ் (bioRxiv) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, இந்த புதிய வகை வைரஸ் பெரியவர்களை விடக் குழந்தைகளை மிக எளிதாகத் தாக்கும் தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிவியல் காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது.

பெருந்தொற்றின் ஆரம்பக்கால ஆதி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாத அல்லது அதற்கான முந்தைய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாத சிறு குழந்தைகளுக்கு, இந்த புதிய வகை வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்புத் திறன் உடம்பில் இயற்கையாகவே இல்லை. குழந்தைகளின் உடலில் உருவாகும் 'வகுப்பு 1 மற்றும் 4' ரத்த எதிர்ப்பு அணுக்களை இந்த புதிய வைரஸ் முற்றிலும் ஏமாற்றிவிட்டு உடலுக்குள் எளிதாக ஊடுருவுகிறது.

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

ஏற்கனவே பழைய வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அல்லது எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளை முறையாகப் போட்டுக் கொண்ட பெரியவர்களின் உடலில் இருக்கும் 'வகுப்பு 1' எதிர்ப்பு அணுக்கள், இந்த புதிய வைரஸை மிக எளிதாக வீழ்த்திவிடுகின்றன.

இந்த வைரஸ் தொடர்ந்து குழந்தைகளிடையே மட்டும் பரவிக்கொண்டே இருந்தால், அது மேலும் ஆபத்தான முறையில் உருமாற்றமடையக் கூடும். அப்படி உருமாறினால், பெரியவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடைக்கும் புதிய பேராற்றலை அந்த வைரஸ் பெற்றுவிடும் என்றும், அது மீண்டும் தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த புதிய ஓமிக்ரான் வகையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, துத்தநாகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தவறாமல் வழங்க வேண்டும்.

அதிர்ச்சி!! தமிழகத்தில் சமூக பரவலாக மாறிய ஒமிக்ரான்!! மக்களே உஷார்!!

குழந்தைகள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் கைகளையும், கால்களையும் சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தமாகக் கழுவுவதைப் பழக்கப்படுத்த வேண்டும். பொது இடங்கள் மற்றும் காற்றோட்டம் இல்லாத மூடிய அறைகளில் குழந்தைகளைக் கூட்டிச் செல்வதைத் தற்காப்பு நடவடிக்கையாகத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்குத் தொடர் காய்ச்சல், சளி, இருமல் அல்லது உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இந்த முக்கிய கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் தடுப்பூசித் திட்டங்களை உருவாக்குவதற்கு மிக முக்கிய வழிகாட்டியாக அமையும் என மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.