பக்தர்களே உஷார்.. திருப்பதியைப் போல் மருதமலையில் சுற்றித் திரியும் சிறுத்தையால் அதிர்ச்சி..!

 
மருதமலையில் சிறுத்தை
மருதமலை முருகன் கோவில் நடைப்பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள  மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். முக்கிய விழா நாட்கள், விஷேச தினங்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மருதமலை முருகன் கோவில் | Subramanya Swami Temple | Coimbatore | Tamil Nadu  Tourism

தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணியானது நடைபெறுகிறது. இதன் காரணமாக மலைப்பகுதிக்கு வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணதாக மருதமலைக்கு படிப்பாதை வழியாக செல்லும் நிலை உள்ளது.  இந்த நிலையில், கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் நடமாடியுள்ளது. 

இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில், பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படிப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்லும் நிலையில் சிறுத்தை நடமாட்டம் பற்றிய தகவல் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Devotees are shocked by the presence of a leopard in the Maruthamalai temple in Coimbatore KAK

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தரிசனம் செய்ய வருவார்கள். திருப்பதி வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடைபயணமாக மலையேறுவார்கள். இந்த நிலையில் திருப்பதி மலை பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வனத்துறை வைத்த கூண்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

From around the web