இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

 
இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

இன்று , புரட்டாசி 02, செப்டம்பர் 18, சனிக்கிழமை
திதி:காலை 06.55 வரை துவாதசி, பின்பு திரையோதசி மாலை 6 வரை அதனை அடுத்து சதுர்த்தசி.
நட்சத்திரம்: அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
விரதம்: சனிப் பிரதோஷம்
இன்று சிவ வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.


இராகு காலம் : காலை 09.00-10.30
எம கண்டம் :மதியம் 01.30-03.00
குளிகன்: காலை 06.00-07.30


சுப ஹோரைகள்


காலை : 07.00-08.00
பகல் 10.30-12.00
மாலை 05.00-07.00
இரவு 09.00-10.00.

இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று ஆனந்தமான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. கொடுக்கல், வாங்கல் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு . வெளியூர் பயணங்களால் திடீர் பணவரவு உண்டு.

ரிஷபம்

இன்று நினைத்த காரியம் நிறைவேறும் நாள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு உண்டு. சுப செய்திகள்வந்து சேரும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொன், பொருள் ,ஆபரண சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்


இன்று சிறு சிறு குழப்பங்கள் உருவாகலாம். சந்திராஷ்டம தினமாக இருப்பதால் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களில் பொறுமையும், நிதானமும் தேவை. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

கடகம்

இன்று உடல் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது . பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் சிரமங்கள் உருவாகலாம் . தெய்வ வழிபாட்டின் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

சிம்மம்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். சுபச் செலவுகளும் உண்டு. தொழிலில் புதிய முயற்சிகளுக்கு பலன் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும் . வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் அடையலாம்.

இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

கன்னி

இன்று சுமாரான நாள் . உடல் நலனில் சிறு பாதிப்புக்கள் உருவாகலாம். செய்யும் செயல்களில் மந்த நிலை உருவாகலாம் . தொழிலில் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறலாம். பணவரவு சுமாராக இருக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் மேலும் சிறப்பான பலன்களை பெறலாம்.

துலாம்

இன்று முயற்சிக்கேற்ற பலன் பெறும் நாள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் உருவாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று பொறுமையை கடைப்பிடித்தால் கூடுதல் பலன்களை பெறலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உடல் நலனில் அக்கறை தேவை. சிறு மனக்குழப்பங்களும் உருவாகலாம். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் உண்டு. சிக்கனத்தை கடைப்பிடித்தால் இன்று பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

தனுசு

இன்று சிறப்பான நாள். வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் பெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறும் நாள். புதிய முயற்சிகளால் லாபம் அடையலாம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

இந்த ராசிக்காரங்களுக்கு இனி யோகம் தான்!!

மகரம்


இன்று குதூகலமான நாள். ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் ஆதரவு உண்டு. பூர்வீக சொத்துக்களால் லாபம் அடையலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டு. புதிய முயற்சிகள் மூலம் லாபம் அடையலாம். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொறுப்புகள் மூலம் ஆதாயம் காணலாம். சுபமுயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் மேன்மை அடையலாம். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

மீனம்


இன்று தொழில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு தீரும். புதிய வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளாலும், கடின உழைப்பாலும் ஆதாயம் பெறலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் சிறப்பான பலன்களை பெற முடியும் .

From around the web