உஷார் மக்களே... இன்று வெப்பநிலை 4 டிகிரி வரை உயரும்! அவசியமில்லாம வெளியே வராதீங்க! வானிலை மையம் எச்சரிக்கை!

 
வெயில் பெண்கள்

கோடை காலம் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சு இருந்தவங்க, கடந்த 2, 3 நாட்களாக கடும் வெயிலைப் பார்த்து கலங்கி நிற்கின்றனர். பங்குனி, சித்திரை மாதங்கள் தான் தமிழகத்தில் வெயில் காலம் . ஆடி மாதமே முடியப் போகிறது. அவ்வப்போது மழை பெய்து, பூமி குளிர்ந்தாலும் வெயில் முடிந்தபாடில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.

பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் அளவு இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது.  வெயில் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்   வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள்

வெயில்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 12 வரை  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் பகல் பொழுதுகளில் இன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும்.  

வெயில்

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக மன அழுத்தம் அசௌகரியம் ஏற்படலாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web