உஷார்.. இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின்தடை அறிவிப்பு... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?!
தமிழ்நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று ஜூலை 18ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை (சில பகுதிகளில் மாலை 4:00 மணி வரை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் : நங்கநல்லூர் / பழவந்தாங்கல்: தில்லை கங்கா நகர், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், ஆண்டாள் நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், பழவந்தாங்கல், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி. நீலாங்கரை பகுதியில் கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவான்கேணி, டீச்சர்ஸ் காலனி, ஒர்க்கர்ஸ் எஸ்டேட், கங்கை அம்மன் கோவில் தெரு.
ஆவடி / பூந்தமல்லி: சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், செந்தில் நகர், சீனிவாசா நகர், பூந்தமல்லி ட்ரங்க் ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, சுந்தர் நகர், கதிர்வேடு.

மேடவாக்கம் / கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர் ரோடு. இதர பகுதிகளான ஆர்.ஏ.புரம் (எம்.ஆர்.சி நகர் உபநிலையம்), பல்லாவரம், குமணன்சாவடி, ஒட்டியம்பாக்கம் மற்றும் பொன்னேரி/பஞ்செட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் ரோடு, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர். அதே போன்று திருச்சி சென்ட்ரல்: மத்திய பேருந்து நிலையம், வி.ஓ.சி சாலை, கண்டோன்மென்ட், கலெக்டர் ஆபீஸ் ரோடு, பாத்திமா நகர், கஜாப்பேட்டை. மன்னார்புரம் / திருவெறும்பூர்: சுப்ரமணியபுரம், கிராஃபோர்ட், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா நகர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர்.
மதுரை மாவட்டத்தில் சம்மட்டிபுரம், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், தினமலர் அவென்யூ, அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் தெரு. வாடிப்பட்டி பைபாஸ், பழநி ஆண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.வி.நகர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, குட்லாடம்பட்டி, சமத்துவபுரம், அலங்காநல்லூர் மற்றும் தனிச்சியம் சுற்றுவட்டாரக் கிராமங்கள்.
விழுப்புரம் மாவட்டம் (திண்டிவனம் பகுதி) திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் ரோடு, காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், ஒலக்கூர்.
திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் டவுன், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு மற்றும் வெலகல்நத்தம் ஆகிய மின் பகிர்மானப் பகுதிகள்.
திருவள்ளூர் மாவட்டம்: காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ராமாபுரம், ஈக்காடு, ஒதிக்காடு, கடம்பத்தூர், பிரியாங்குப்பம் மற்றும் புதுமாவிலங்கை.

கோவை (சூலூர், காந்திபுரம்), திண்டுக்கல், தர்மபுரி, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருவாரூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் முதன்மைப் பராமரிப்புத் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடைபடும்.
பராமரிப்புப் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே நிறைவடைந்துவிட்டால், மின்தடை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை இந்த நேரத்திற்கு ஏற்பத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
