உஷார்.. அரிசி விலை கிடுகிடு உயர்வு... தீபாவளிக்குள் ரூ.3,000 வரை உயர வாய்ப்பு!

 
அரிசி

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய பொதுமக்களும் குடும்பத்தரசிகளும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

அரிசி வெங்கட்ரமணன்

சந்தையில் பிரபல ரகங்களான டீலக்ஸ் பொன்னி அரிசி மூட்டை ஒன்றின் விலை 1,400 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாகவும், பொன்னி அரிசி 1,600 ரூபாயிலிருந்து 1,950 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோன்று, வெள்ளை பொன்னி அரிசி 1,900 ரூபாயிலிருந்து 2,300 ரூபாயாகவும், இட்லி அரிசி மூட்டை 900 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும், உயர்தர ராஜபோகம் அரிசியின் விலை மூட்டைக்கு 2,500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.’

அரிசி ஆலை

தொடர்ந்து சந்தையில் நிலவி வரும் இந்த திடீர் விலை உயர்வு இதே போக்கில் நீடிக்கும் பட்சத்தில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்குள் ஒரு சிப்பம் (மூட்டை) அரிசியின் விலை 3,000 ரூபாயை எட்டக்கூடும் என அரிசி வியாபாரிகள் தரப்பில் கவலை தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.