உஷார்... கோவையில் வீடுகளை நோட்டமிட்டுத் திருட முயன்ற வடமாநிலப் பெண்கள் - அதிர்ச்சி வீடியோ!
கோவையில் யாசகம் கேட்பது போல் நடித்து வீடுகளை நோட்டமிட்டுத் திருட முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களைப் பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகர்ப் பகுதியில் யாசகம் (பிச்சை) கேட்பது போல நடித்துச் சில பெண்கள் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளைச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளில் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்பெண்களின் நடமாட்டத்தைக் கவனித்த பகுதி மக்கள், உடனடியாக அவர்களைத் தப்பியோட விடாமல் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பிடிபட்ட 5 வடமாநிலப் பெண்களையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அப்பெண்களைப் பிடித்து வைத்துள்ள காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
