உஷார்.. நாளை முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்... சிலிண்டர் முதல் பி.எஃப் பணம் வரை எல்லாமே மாறுது!

 
மார்ச் 1

இன்றுடன் பிப்ரவரி மாதம் நிறைவடையும் நிலையில் நாளை மார்ச் மாதத்தின் துவகத்தில் இருந்தே நமது அன்றாடச் செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

நாளை மார்ச் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலையில் துவங்கி பிஎஃப் பணம் எடுக்கும் வரையில் பல விஷயங்களில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.  

1. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம்:

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைப்பது வழக்கம். கடந்த மாதம் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், இந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையுமா அல்லது உயருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து இந்த அறிவிப்பு நாளை அதிகாலை வெளியாகும்.

கேஸ் சிலிண்டர்

2. பிஎஃப் (PF) கணக்குதாரர்களுக்குப் புதிய வசதி:

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நற்செய்தி. இதுவரை பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கு இருந்த சிக்கலான நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. மார்ச் முதல் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலமாகவே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகமாகிறது. அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும் ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பெரும் உதவியாக இருக்கும்.

upi pf யுபிஐ பிஎஃப்

3. ரயில்வே பயணிகளுக்குப் புதிய 'ரயில் ஒன்' செயலி: 

ரயில் பயணிகளுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை பயன்பாட்டில் இருந்த யுடிஎஸ் செயலி மார்ச் 1ம் தேதி முதல் முழுமையாகச் செயல் இழக்கும். அதற்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 'ரயில் ஒன்' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயணிகள் தடையின்றி டிக்கெட் எடுக்க இந்தப் புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்வது அவசியம்.