உஷார்... இன்று முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து மாற்றம்

இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளே...அலுவலகங்களுக்கு கிளம்புபவர்களே...உங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க. கொஞ்சம் முன்னாடியே கிளம்பிச் சென்று, கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆகஸ்ட் 7ம் தேதி திங்கட்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி முதல்வர்  ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இன்று காலை 8 மணிக்கு மெளன ஊர்வலமாக சென்று கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.  

இதன் பொருட்டு இன்று காலை சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் கருணாநிதி சிலையில் இருந்து, கருணாநிதி நினைவிடம் வரை இந்த மெளன ஊர்வலம் நடைபெற  உள்ளது. எனவே ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து தடை

இது குறித்து  போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையின் முக்கிய சாலைகளில் மெளன ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தேவைப்படும் பட்சத்தில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.  

போக்குவரத்து மாற்றம்

காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும்.மெளவுன ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் நேரத்தில் வாகனங்கள் அண்ணாசாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

இதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். இதன் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலைகளைத் தவிர்த்து வாகன ஓட்டிகள்  மாற்று வழியில் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web