உஷார்... யாசகம் கேட்பது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட வடமாநில பெண்கள்!

 
திருட்டு வடமாநில பெண்கள்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் யாசகம் கேட்பது போல் வந்து குடியிருப்புகளில் திருட்டில் ஈடுபட்ட வடமாநில பெண்களைப் பொதுமக்கள் பிடித்துப் போலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் யாசகம் கேட்பது போல் நுழைந்த வடமாநில பெண்கள் சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏ.சி. செம்பு குழாய்கள் மற்றும் செம்பு கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளனர். இவர்களின் இந்தத் திருட்டுச் செயல்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவுபடப் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், மீண்டும் அதே பகுதிக்குத் திருடும் நோக்கில் வந்த அந்தப் பெண்களை அடையாளம் கண்ட பொதுமக்கள், அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண்களிடம் உரிய அடையாளச் சான்றுகள் இல்லை எனக் கூறி போலிஸார் அவர்களை எவ்வித முதற்கட்ட விசாரணையுமின்றி உடனடியாக விடுவித்து விட்டதாகக் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க போலிஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.