இரவு 10 மணியைத் தாண்டியும் கலைநிகழ்ச்சி... போலீசார் தடியடி!
நேற்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்களிலும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனேகிரி அருகே காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றதால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி க.ஆலம்பாடி கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காணும் பொங்கலையொட்டி அந்த கிராமத்தினர், சிறியளவில் மேடை அமைத்து அதில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.

பொங்கல் நிகழ்ச்சிக்கு இரவு 10 மணிக்கு மேல் அனுமதியில்லை என காவல்துறையினர் முன்பே அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து 10 மணிக்கும் மேலாக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென போலீசார் தடியடி நடத்தினர். காவல் துறையினர் தங்களை தாக்கியதாக இரவு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் திரண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் வாகனங்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர்.

இது குறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் டிஎஸ்பி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
