‘உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி...’ முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

 
பாரதியாரின் திருவுருவச் சிலை

"தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி!" என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில்,

"உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!

தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!

மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!" என்று பதிவிட்டுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் பாரதியார் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்!!

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!