ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்து இளைஞர் ரயில் முன் பாய்ந்து பலி!

 
police

 

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரே வீட்டில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைக் கொலை செய்துவிட்டு, குடும்பத் தலைவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போபால் அருகே மாலிகேடி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர சாஹு (35). இவரது தாயார் சரஸ்வதி (50), மனைவி சோமலதா (29), மகள் கீர்த்தி (10), மகன் குஷ் (6). நவம்பர் 2-ம் தேதி, ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ரெயில் மோதி இறந்தவர் நரேந்திர சாஹு என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, தாயார், மனைவி மற்றும் இரு குழந்தைகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், நரேந்திர சாஹு குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Bhopal man slits throats of mother, wife and 2 children, jumps in front of train - Bhopal News | India Today

சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தின் பொருளாதார நிலை மற்றும் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழப்புகளுக்கான முழுமையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.