பிக்பாஸ் கோர்ட்டில் மாயா, விசித்ரா வழக்கு.... வைரல் ப்ரோமோ!!

 
பிக்பாஸ் கோர்ட்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலமாவதோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முன்னதாகவே ப்ரமோவில் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

பிக்பாஸ் 7

முதலாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து  பவா செல்லதுரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறி வெளியே சென்றுவிட்டார். பின்னர் விஜய் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அடுத்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா என வீட்டிலிருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த நிலையில் அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகியுள்ள நிலையில் அவரை பெரிதும் கவராத நபர்கள் என அர்சனா, தினேஷ், விசித்திரா, கூல் சுரேஷ், மணி, ரவீனா என 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனை தொடர்ந்து எவிக்‌ஷன் நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸில் 39-வது நாளிற்கான முதலாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இன்று பிக்பாஸ் வீடு பிபி நீதிமன்றமாக மாறுகிறது. அதில் யார் யார் மீது வழக்கு தொடுக்கிறார்கள் என்று கேட்கப்படுகிறது. பின்னர் வழக்கு தொடுத்தவர்கள் மாறி மாறி வாதாடுவது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

From around the web