BIG BREAKING: “போட்றா வெடிய... 118-ஐ எட்டியது தவெக..” - விசிக-வும் ஆதரவு கடிதம் வழங்கியதாகத் தகவல் - தமிழகத்தில் அமைகிறது விஜய் அரசு?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இழுபறிகளுக்கு இன்று ஒரு முடிவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) தவெக ஆட்சி அமைக்கத் தனது ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வைத்திருந்த விஜய்க்கு, தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது, தவெக: 108, காங்கிரஸ்: 5, சிபிஐ: 1, சிபிஎம்: 2, விசிக: 2 என மொத்த பலம்: 118 (பெரும்பான்மைக்குத் தேவை 118)

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா எனத் தீவிர ஆலோசனையில் இருந்த விசிக தலைவர் திருமாவளவன், இறுதியில் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாகத் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எ.வ.வேலுவுடனான ரகசியச் சந்திப்பு மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவின் தொலைபேசி அழைப்பு எனப் பல கட்ட நகர்வுகளுக்குப் பிறகு, "மக்களின் தீர்ப்பை மதித்து" இந்த முடிவை விசிக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜய், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்திக்க உள்ளார். அப்போது தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார். 118 என்ற பெரும்பான்மை பலத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கும் பட்சத்தில், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.

பதவியேற்பு விழா வரும் மே 10-ஆம் தேதி நடைபெறலாம் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் பல தசாப்தங்களாக நீடித்த திமுக - அதிமுக ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது.
