BIG BREAKING: உடனடி அமல்... அரசுப் பணிகளில் நேரடி நியமன வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு!
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி லட்சக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அனைத்து விதமான அரசுப் பணிகளின் நேரடி நியமனத் தேர்வுகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு தற்போதைய விதிகளில் உள்ளதை விடக் கூடுதலாக 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு உயர்வுப் பலனானது பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வயதுச் சலுகைகளுடன் கூடுதலாகச் சேர்த்து வழங்கப்படும். இந்த வயது வரம்பு உயர்வு அரசாணை வெளியிடப்பட்ட இன்றிலிருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த சிறப்பு வயது வரம்புத் தளர்வு இன்று முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று மற்றும் தேர்வுகள் தள்ளிப்போனதால் வயது வரம்பைக் கடந்து வேலைவாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கும் போட்டித் தேர்வர்களுக்கும் இந்த உத்தரவு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
