சிபிஎஸ்இ., யில் பெரிய மாற்றம்... பொதுத்தேர்வுக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தனி இணையதளம்!

 
சிபிஎஸ்இ சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பது வழக்கம். இந்த விண்ணப்பச் செயல்முறைகளை மேலும் எளிமையாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் 'Post-Result Activities portal' என்ற புதிய பிரத்யேக இணையதளத்தை ஜூன் 1ம் தேதி முதல் சிபிஎஸ்இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

கடந்த காலங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே தளத்தைப் பயன்படுத்திய போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கும் விதமாக இந்தத் தனி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மீண்டும் கூட்டிச் சரிபார்த்தல், விடைத்தாளின் நகலைப் பெறுதல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல் ஆகிய மூன்று முக்கியச் செயல்பாடுகளுக்கும் இந்த ஒரே தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிபிஎஸ்இ

விண்ணப்பக் கட்டணங்களை இணையவழியாகச் செலுத்துவதற்கும், விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை உடனுக்குடன் ஆன்லைனிலேயே கண்காணிப்பதற்கும் ஏதுவாகத் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய இணையதளத்தைப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான பிரத்யேக உதவி மையத்தையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது:

கட்டணமில்லா உதவி எண்: 1800118004 (வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்). அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் rsultcbse2026@cbseshiksha.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களது புகார்களை அனுப்பி மாணவர்கள் தீர்வு பெறலாம்.

சிபிஎஸ்இ தேர்வுகள்

இந்தத் தளம் ஜூன் 1 முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் முதன்மை இணையதளம் வழியாகவோ அல்லது நேரடியாக இந்த புதிய போர்ட்டல் வழியாகவோ தங்களது விவரங்களைப் பதிவு செய்யத் தயாராக இருக்குமாறு கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.