பரபரப்பு... சுத்தியலால் தாக்கப்பட்ட அம்பேத்கர் சிலை... பஞ்சாப், டெல்லியில் அரசியல் புயலை கிளப்பிய ஆம் ஆத்மி!
இந்தியாவில் ஜனவரி 26ம் தேதி பஞ்சாபில் டாக்டர் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கும், பஞ்சாப் அரசுக்கும் எதிராக இந்த விவகாரம் திரும்பி உள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் 33 அடி உயரம் கொண்ட டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலை தாக்கப்பட்டதால் சிலையின் பாகங்கள் இடிக்கப்பட்டன. குடியரசுநாளில் நடந்த இச்சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே இருக்கும் இந்த சிலையை யாரோ சுத்தியல் வைத்து உடைத்து உள்ளனர்.
டாக்டர் பி.ஆர் அம்பேத்காரின் சிலைக்கு நேர்ந்த அவமதிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களிடமிருந்து பரவலான கண்டனத்தை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலித் சமூகத்தை அவமரியாதை செய்ததாக பாஜக மிகக் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்தச் செயல் என் இதயத்தை நொறுக்குகிறது என பதிவிட்டுள்ளார். மேலும் பாஜக தலைவர்கள் பலரும் கெஜ்ரிவாலின் தலைமையின் கீழ் செயல்படும் பஞ்சாப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கெஜ்ரிவால் அரசு தலித் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அத்துடன் தலித் விரோத நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லம் அருகே போராட்டம் செய்தனர். கெஜ்ரிவால் பதவி விலகக் கோரியும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் பஞ்சாப் எம்பி குர்ஜித் சிங் அவுஜ்லா மற்றும் மூத்த தலைவர் ராஜ் குமார் வெர்கா உள்ளிட்ட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கார் சிலையை பார்வையிட்டு இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த விவகாரத்தால் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அனைத்து தரப். அம்பேத்கார் போன்ற மிகப்பெரிய தலைவரின் சிலையை கூட ஆம் ஆத்மி பாதுகாக்க தவறிவிட்டதாக கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. மேலும் அம்பேத்கரின் அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று , மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் கோரிக்கை வைத்து உள்ளார். ஆம் ஆத்மியின் செயலை பார்க்கும் போது ஆம் ஆத்மி கட்சிக்கும் காலிஸ்தானிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார். முன்னாள் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும், புகழ்பெற்ற கவிஞருமான குமார் விஸ்வாஸ், அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்தைப் பெறுவதற்காக காலிஸ்தானி இயக்கங்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகவும், அவர்களின் உதவியை பெறுவதற்கான வேலைகளை செய்வதாகவும் குற்றம்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. டாக்டர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு பஞ்சாப், டெல்லியில் மிகப்பெரிய அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மேலும் அங்கே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. . ஆம் ஆத்மி கட்சிக்கும், பஞ்சாப் அரசுக்கும் எதிராக இந்த விவகாரம் திரும்பி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
