பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்... வைரலாகும் ட்ரோல்ஸ்!!

 
பிக்பாஸ் 7

பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 45 நாட்களாக விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. 2 வீடுகள், ஸ்மால் பாஸ், பிக்பாஸ், போட்டியாளர்கள், வைல்ட்கார்ட் , சச்சரவுகள் என  பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இதுவரை பெரிதாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத போட்டியாளராக இருக்கும் சரவண விக்ரம், தற்போது நெட்டிசன்களின் மீம்ஸ் மெட்டீரியாலாக மாறியுள்ளார்.

பிக்பாஸ் 7

தற்போது 6 வாரங்கள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் மாயா பூர்ணிமா, ஜோவிகா  உட்பட ஒரு  சிலர் ஒரு க்ரூப்பாகவும், விசித்ரா அர்ச்சனா தினேஷ் என மற்றவர்கள் மற்றொரு  க்ரூப்பாகவும் விளையாடி வருகின்றனர். இந்த 2 க்ருப்புக்கும் பொதுவாக ஒரு சிலர் மட்டுமே பேசி வருகின்றனர்.  சிலர்  தங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதே தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர்.இந்த மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்த வினுஷா தேவி, அக்ஷையா, பிராவோ ஆகியோர் குறித்து மீம்ஸ்கள் விமர்சனங்கள்  வைரலாகி வருகின்றன.   சரவண விக்ரம்  நிகழ்ச்சிக்கு  வந்ததில் இருந்து பெரிதாக எதுவும் செய்யாத சரவண விக்ரம், கேப்டனாக இருந்தபோது கூட தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.  

பிக்பாஸ் 7
அதே சமயம் கடந்த வாரம் சரவண விக்ரம் பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ  ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் தான் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர்  எனவும்,   கட்டிப்பிடிப்பது குறித்தும் பேசியிருந்தார். இதுவரை  அமைதியின் சின்னமாக பிக்பாஸ் வீட்டில் நடமாடி வருகிறார் விக்ரம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவ்வளவு பேச்சு பேசுவியேப்பா இப்போ என்னாச்சி, அமைதியா இருக்க அத்தனையும் நடிப்பா என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஒரு பகுதியினர்  கலாய்த்து வருகின்றனர்.   முதல் சீசனில் அமைதியாக இருந்து ரித்திகா சாம்பியனாக மாறியது போல் இவரும் விரைவில்  சாம்பியனாக வலம் வருவார் என பதிவிடுகின்றனர்.  சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டில் இனிமேலாவது தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடுவரா அல்லது அமைதியா இருந்தே கப்  ஜெயிப்பாரோ பார்க்கலாம். ஆனால் கப் முக்கியம் பிகிலு... 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web