காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் நடிகர்!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
கவின்

2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் அறிமுகமானவர் கவின். அதனைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் உதவி இயக்குநரானாராகவும் பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.
2017-ல் வெளியான ‘சத்ரியன்’, 2019-ல் வெளியான ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படங்களில் நடித்தவர் 2021-ல் வெளியான ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கவின்

இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.இதன் மூலம் கவினுக்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவானது மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் அவரது மதிப்பு உயர்ந்தது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவின்


தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் இந்த மாதம் (ஆகஸ்டு) 20-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web