வைரல் வீடியோ!! பிக்பாஸ் நடிகர் மனைவி கர்ப்பம்!!

 
நிஷா

அன்தாரிக்‌ஷ், மாயாவி  இந்தி சீரியல்களில் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.  2006ம் ஆண்டு ‘த அங்கரீஸ்’ என்ற ஹைதராபாதி உருது மொழியில் பெரிய திரையில் அறிமுகமானார். ராதா மோகன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.உன்னைப்போல் ஒருவன், கோ, பனித்துளி, தீயா வேலை செய்யணும்  குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன்   படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கணேஷ்.இந்நிகழ்ச்சியில் நேர்மையின் சிகரமாக இருந்த அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பைனலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நிஷா

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை  2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார்.இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார். அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை நிஷா. இதைப்பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் நிஷாவுக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web