பிக் பாஸ் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை! 15 போலீசாரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட நடிகர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அதன் டைட்டில் வின்னர் ஆனார். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி தினமான நவம்பர் 8-ம் தேதி இரவு, அவரது வீட்டிற்கு சுமார் 15 போலீசார் சென்று போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி முருகதாஸ், போலீசாரிடம் தனது வீட்டில் முழுமையாகச் சோதனையிடுமாறு கூறியதுடன், ரத்தப் பரிசோதனைக்கும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது வீட்டிற்கு போலீசார் எந்த அடிப்படையில் வந்தார்கள் என்றும், தன் மீது புகார் அளித்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சோதனையின்போது மூன்று பூனைகள் மற்றும் ஒரு நாயைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றும், தேடுதல் வாரண்ட் இல்லாமல் போலீசார் வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
