கல்லாப்பெட்டியைத் தூக்கிச் சென்ற மர்ம நபர் - பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா கௌதமின் கடையில் திருட்டு!

 
பிக்பாஸ் அர்ச்சனா கௌதம்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும் மாடலுமான அர்ச்சனா கௌதம், மும்பையில் நடத்தி வரும் உணவகத்தில் மர்ம நபர் ஒருவர் கல்லாப்பெட்டியைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அர்ச்சனா கௌதமுக்குச் சொந்தமாக மும்பையில் ‘ஓயே சுரோஸ்’ என்ற பெயரில் கேஃபே செயல்பட்டு வருகிறது. இவர்களது உணவகத்திற்குள் நைசாக நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கல்லாப்பெட்டியை அப்படியே அலேக்காகப் பெயர்த்துத் தூக்கிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.


கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இந்தத் திருட்டுச் சம்பவத்தின் காட்சிகளை அர்ச்சனா கௌதம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பல ஆண்டுகாலக் கடின உழைப்பாலும், சிறுகச் சிறுகச் சேர்த்த சொந்தச் சேமிப்பாலும் இந்த உணவகத்தை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தச் சம்பவம் தனக்கு மன உளைச்சலைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்யும்படி மும்பைக் காவல்துறையினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.