பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரி: புதிய போட்டியாளராக நுழைந்த பிரபல நடிகை!

 
பிக் பாஸ் ஆனந்தி

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில், புதிய போட்டியாளராகத் பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான ஆனந்தி களமிறங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாகப் பிளாக் பாண்டி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, சக போட்டியாளர்களின் தேர்வால் சாவின்யா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

ஏற்கனவே காமன் மேன் பிரிவைச் சேர்ந்த மணிவண்ணன் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்த நிலையில், தற்போது இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை ஆனந்தி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான புரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற 'ஜோடி நம்பர் 1' நடன நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பிரபலமான இவர், 'மீகாமன்', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், 'கனா காணும் காலங்கள்', 'கார்த்திகைப் பெண்கள்' போன்ற பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'ஜன நாயகன்' படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியது ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.