என் தற்கொலைக்கு பிக்பாஸ் முத்துக்குமரன் தான் காரணம்... வீடியோ வெளியிட்டு இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் மீது வஹிதா பேகம் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாகக் குற்றம்சாட்டியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் வெற்றியாளர் முத்துக்குமரன் மீது வஹிதா பேகம் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது தற்கொலை முயற்சிக்கு முத்துக்குமரன்தான் காரணம்" என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிக்குரிய வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, தான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வஹிதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வழியாகத் தகவல் பதிவிட்டுள்ளார்.
இவர்களுக்கிடையேயான இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்களிடையேயான முந்தைய பழக்கம் அல்லது காதல் விவகாரம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
