"பெண்களைப் பேசி மயக்குவதில் கில்லாடி" - பிக்பாஸ் முத்துக்குமரன் குறித்து பாடலாசிரியர் தாமரை கடும் தாக்கு!
தொகுப்பாளரும் பேச்சாளருமான முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகக் கூறி பெண் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோக்களையும், அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்துப் பிரபல பாடலாசிரியர் தாமரை தனது கடுமையான கண்டனங்களையும் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.

"பேசி மயக்கும், எழுதி மயக்கும் அனைத்து கில்லாடி அயோக்கியர்களுக்கும் இது பொருந்தும். இதில் ஆண், பெண் இருபாலாரும் வல்லவர்களாக இருக்கிறார்கள்" என்று தாமரை கடுமையாகச் சாடியுள்ளார்.
இன்றைய ஜென் Z இளைஞர்கள் எதற்கும் துணிந்தவர்களாகவும், எந்தவிதமான அடிப்படை ஒழுக்கமும் நாகரிகமும் அற்றவர்களாகவும் மாறி வருவதாக அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

இன்ஸ்டா பிரபலம் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக எழுந்த புகாரும், அதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ஆவணங்களும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாமரையின் இந்தக் கருத்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
