பிக் பாஸ் முத்துக்குமரன் மீது வழக்கு: திருமண மோசடி புகாரைத் தொடர்ந்து தலைமறைவு !
Updated: Nov 23, 2026, 16:10 IST
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக வஹிதா என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமரனைத் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றபோது, அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போன் எண்ணும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள முத்துக்குமரனைக் கண்டுபிடிக்கத் தீவிர தேடல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
