பிக்பாஸ் சீஸன் 7.. வைல்டு கார்டில் எண்டிரி கொடுக்க போகும் பிரபல கானா பாடகர்.. யார் தெரியுமா..?

 
பிக்பாஸ் சீஸன் 7
பிக்பாஸ் சீஸன் 7-இல் வைல்ட் கார்ட் எண்டிரியாக கானா பாலா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

18 போட்டியாளர்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 7-இல் முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறினார் . அனன்யாவின் எலிமினேஷன் நிகழ்ந்த மறுநாளே எழுத்தாளர் பவா செல்லத்துரையும் வெளியேற விரும்புவதாகச் சொல்லி தானாகவே வெளியேறினார். பவாவின் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை அது எவிக்‌ஷன் இல்லை பவா வெளியேறியதால் சென்ற வாரம் எவிக்‌ஷன் இல்லை. சிறிய வீட்டிலிருக்கிற போட்டியாளர்களில் குறைவான ஓட்டுகள் வாங்குகிற ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக இருக்கிறார். இந்தச் சூழலில், மேலும் ஒருசில போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம் என்கிற பேச்சு அடிபட்டு வந்தது.

ஆரம்பமாகப்போகும் பிக்பாஸ் சீசன் 7: வெளியானது சூப்பர் அப்டேட்! - மனிதன்

மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வார்கள் எனப் பரவிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்த போது சீரியல் நடிகை அர்ச்சனாவின் பெயர் அடிபட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது வைல்டு கார்டு மூலம் செல்ல இருக்கும் ஆண் போட்டியாளர் குறித்து நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி கானா இசைப் பாடகர் பாலாதான் அந்தப் போட்டியாளர் எனத் தெரியவந்துள்ளது.

நிலையில்லா வாழ்கையிது.. கானா பாலாவின் புதிய ஆல்பம்..! | Gana bala has  released a new album song - Tamil Filmibeat

பாலமுருகன் என்கிற கானா பாலா தன் இளமைக் காலத்தில் இருந்தே 'கானா' பாடுவதில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்து வருகிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'கானா குயில் பாட்டு'   நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றவர். கானா பாடல்களைப் பாடிவரும் அதே நேரம் மறுபுறம் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார்.

From around the web