பிக் பாஸ் வீட்டில் வெடித்த மோதல்! தான்யாவை நோக்கி பாய்ந்த முகேஷ்... வினோத் பாபு செய்த காரியம்!

 
பிக்பாஸ்10

 

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான தான்யா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க்கின்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முகேஷ், தான்யாவைப் பார்த்து கடுமையான வார்த்தைகளைப் பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில் தெரிகிறது. குறிப்பாக, "மூடிட்டு இரு, பத்து போட்டு விட்டுறுவேன்" என்று அவர் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தான்யாவும் முகேஷை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. முகேஷ் தான்யாவை நோக்கி ஆவேசமாகச் சென்றதாகவும் வெளியாகியுள்ள ப்ரோமோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, இந்த வாரம் ஜூனியர் பிக் பாஸாகப் பொறுப்பேற்றுள்ள வினோத் பாபு, இருவருக்கும் இடையிலான பிரச்சினையைச் சமாளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தான்யாவுக்கு ஆதரவாகவும் முகேஷின் செயல்பாட்டைக் கண்டித்தும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.இந்தச் சண்டை அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.