Bigg Boss Tamil 10: TTF வாசனுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 2 பேர்! யார் தெரியுமா?

 
பிக்பாஸ்10

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (அக்.4) 3 புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் பிரபல யூடியூபரும், சமூக வலைதளங்களில் அதிகம் அறியப்பட்டவருமான TTF வாசன் முக்கிய போட்டியாளராக களமிறங்குகிறார். அவருடன் மேலும் 2 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், அக்‌ஷிதா மற்றும் கரிஷ்மா ஆகியோரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்‌ஷிதா ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க கட்டத்தில் கவனம் பெற்றவர். இவர் தற்போது வீட்டுக்குள் போட்டியாளராக நுழைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் இடம்பெற்று, இறுதிக்கட்டம் வரை வந்த கரிஷ்மாவுக்கும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு புதிய போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த சீசனில் லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவித் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் மீண்டும் வீட்டுக்குள் வந்திருந்தனர். தற்போது அவர்களில் சவின்யா மற்றும் ஜாவித் வெளியேறிய நிலையில், புதிய 3 போட்டியாளர்களின் வருகை நிகழ்ச்சியில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக TTF வாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது சமூக வலைதளங்களில் ஏற்கனவே அதிக கவனத்தை பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து வருகின்றனர்.புதிய போட்டியாளர்களின் வருகையால் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டி மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாருடன் மோதப் போகிறார்கள், வீட்டில் என்னென்ன புதிய திருப்பங்கள் ஏற்படப் போகின்றன என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும்.