BB10:அதிரடி ட்விஸ்ட்..10வது வாரம் வரை நோ எவிக்ஷன்!
‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு முக்கியமான புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 போட்டியாளர்களுக்கு ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பாஸ் கிடைக்கும் போட்டியாளர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் எவிக்ஷன் அச்சமின்றி நிகழ்ச்சியில் தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அதிகபட்சமாக 70 நாட்கள் வரை எவிக்ஷனில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் தெரிவித்தபோது, பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த பாஸை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் என்பது போட்டியாளர்களின் பயணத்தில் முக்கியமான கட்டமாக இருக்கும் நிலையில், நீண்ட காலத்துக்கு எவிக்ஷனில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு கிடைப்பது போட்டியாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த பாஸை வெல்லும் 3 போட்டியாளர்கள் யார், அதற்கான டாஸ்க் என்ன, எந்த விதிமுறைகளின் அடிப்படையில் பாஸ் வழங்கப்படும் என்பது நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் இந்த புதிய ட்விஸ்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
