பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த சம்பவம்... ₹2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சோனாலி ராவத் வழக்கு!

 
பிக் பாஸ் நடிகை சோனாலி ராவத் பிக் பாஸ் நடிகை சோனாலி ராவத்

மராத்தி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களம் இறங்கிய நடிகை சோனாலி ராவத், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது அதிரடியான புகார் ஒன்றைப் பதிவு செய்து, சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கியிருந்த போது, அங்கிருந்த சுகாதாரமற்ற சூழல் மற்றும் அசுத்தமான பராமரிப்பு காரணமாகத் தனக்குக் கடுமையான சரும நோய் ஏற்பட்டதாகச் சோனாலி ராவத் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

வெயிலில் மின்னும் சருமம்

தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக, பிக் பாஸ் தயாரிப்பு குழுவினர் 2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரி சோனாலி ராவத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் நகல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சருமம்

சர்ச்சையில் பிக் பாஸ்: நூற்றுக்கணக்கான கேமராக்கள் மற்றும் சொகுசு வசதிகள் கொண்டதாகக் காட்டப்படும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக ஒரு போட்டியாளரே புகார் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பிக் பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை அறிய பாலிவுட் மற்றும் மராத்தி மீடியாக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.