பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.40 கோடி நகைகள் கொள்ளை ... அதிர்ச்சி வீடியோ!

 
jewellery

 

பீகார் மாநிலத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், துப்பாக்கி முனையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மிரட்டி ரூ.40 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு சம்பரான் மாவட்டம் பெட்டியா நகரில் உள்ள சென்கோ கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகைக்கடைக்குள், நேற்று பிற்பகல் 3 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தது. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ஒரே இடத்தில் அமர வைத்ததுடன், அவர்களது செல்போன்களையும் பறித்தது.

தொடர்ந்து, கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம் உள்ளிட்ட ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிக்கொண்டு தப்பியது.

மேலும், கடையைவிட்டு வெளியேறும்போது, “மீண்டும் வருவோம்… இது ஜஸ்ட் டிரைலர்தான்” என்று கொள்ளையர்கள் கூறிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.