பீகார் திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, ஒருவர் காயம்!

 
பீகார்

 

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சகியா கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருமண விழாவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி - போலீசார் தீவிர விசாரணை | Two killed, one injured in firing at wedding ceremony in Bihar's Bhojpur district

ராகுல் குமார், தீபக் குமார் மற்றும் சோனு குமார் ஆகிய மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவர்கள் ஆரா சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ராகுல் மற்றும் தீபக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். காயமடைந்த சோனு அபாய கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

Two killed, one injured in shooting at wedding in Bihar's Bhojpur

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக கௌஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தீமன் யாதவ் மற்றும் ஆஷிஷ் யாதவ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குற்றவாளிகளைப் பிடிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது