பாஜக அமைச்சர் வீட்டில் ரூ.90 லட்சம் கொள்ளை! 600 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி திருட்டு

 
bjp

 

பீகார் மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் டைகரின் பாட்னா வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Minister Sanjay Singh Tiger's Patna residence targeted by thieves | AWAZ E BIHAR

பீகார் உயர்கல்வித் துறை அமைச்சரான சஞ்சய் சிங் டைகரின் குடும்பத்தினர், சத் பண்டிகையையொட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், பாட்னாவின் ஏ.ஜி. காலனியில் உள்ள அமைச்சரின் இரண்டு மாடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

வீட்டில் இருந்த 4 அறைகளின் பூட்டுகளை உடைத்து, பீரோக்களில் இருந்த சுமார் 600 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மொத்த கொள்ளையின் மதிப்பு ரூ.90 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களுக்கு வீட்டைப் பற்றிய தகவல்களை அளித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது