அரசு மருத்துவமனைக்குள் மது விருந்து? வைரலான சிசிடிவி காட்சி!
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டிடத்துக்குள் சிலர் மது அருந்துவதாகக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிசிடிவியில் பதிவானதாகக் கூறப்படும் காட்சிகள்
बिहार- दरभंगा मेडिकल कॉलेज अस्पताल में शराब पीने का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है. वीडियो में अस्पताल की महिला सफाईकर्मी और एक युवक, जो ट्रॉली कर्मी बताया जा रहा है, नजर आ रहे हैं. दावा किया जा रहा है कि यह वीडियो अस्पताल के सर्जिकल भवन का है. वीडियो सामने आने के बाद अस्पताल प्रशासन से लेकर पुलिस महकमे तक में हलचल मच गई है. पुलिस ने FIR दर्ज कर ली है. #Bihar #Darbhanga
— NDTV India (@ndtvindia) October 15, 2026
பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (DMCH) அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இணையத்தில் பரவி வரும் சிசிடிவி காட்சிகளில், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சிலர் மருத்துவமனை ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. எனினும், வீடியோவில் இருப்பவர்களின் அடையாளம் மற்றும் பணிப்பொறுப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, தர்பங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பென்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தின் முழுமையான சிசிடிவி காட்சிகளைப் பெற்று, அதில் இருப்பவர்களை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் மது அருந்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவில்தான் சம்பவத்தின் முழு விவரங்கள் தெரியவரும்.
