கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் பலி! பீகாரில் சோகம்

 
படகு

 

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி மாவட்டத்தில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 15 முதல் 20 பேர் வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றதாகத் தெரிகிறது. உயிரிழந்த 13 பேரும் 15 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீட்புப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.