மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை லாரி கண்ணாடியில் தொங்கியபடியே 100 கி.மீ ஓட்டிச் சென்ற டிரைவர்... அதிர்ச்சி வீடியோ!

 
மாமூல்

 

கட்டுரை: பீகார் மாநில நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை மறித்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை, லாரி ஓட்டுநர் ஒருவர் வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் தொங்கியபடியே சுமார் 100 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் வேகமாக இயக்கிய நிலையில், அந்த நபர் லாரியின் முன்பக்கக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கியுள்ளார்.

லாரி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோதே, கண்ணாடியில் தொங்கியபடி அந்த நபர் ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கம்பு மற்றும் அரிவாளைக் கொண்டு இருவரும் சண்டையிட்டுக் கொண்டே பயணித்த காட்சிகள் காண்போரைப் பதைபதைக்க வைத்துள்ளது.இந்தத் திகிலூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன