பீகாரில் கோர விபத்து: லாரி மீது ஆட்டோ மோதல்; 8 மாதக் குழந்தை உட்பட 4 பேர் பலி!

 
auto

 

பீகார் மாநிலம் சாரன் மாவட்டத்தில் லாரியும் ஆட்டோ ரிக்ஷாவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேருக்கு நேர் மோதிய லாரி

சாரன் மாவட்டம் கர்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பஹார்பூர் சவுக் அருகே செவ்வாய்க்கிழமை (அக். 27) இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. எதிரே வந்த லாரி, ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் வாகனம் பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

லாரி ஓட்டுநருக்குப் போலீசார் வலை

விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அவரைத் தேடும் பணியும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.