பயங்கரம்... 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒருவர் பலி!

 
பைக்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.