அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு... வாலிபர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிக்கடி பைக் திருட்டு நடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடுவதற்காக ஒரு வாலிபர் அங்கும் இங்கும் நோட்டமிட்டு இருப்பதே போலீசார் கண்காணித்து அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அவர் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, திருடப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 30 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக புகார் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!