பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் பலி... பெரும் சோகம்!

 
பைக்

 

விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்தில் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ஆம்புலன்ஸ்

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்களை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புறவழிச்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் இது போன்ற விபடுகள் தொடர்வதாகக் கூறி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் வேகத்தடைகள் மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.