பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி விபத்து... 2 பேர் பலியான துயரம்!

 
பைக் விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக்கொண்ட விபத்தில், வாகனங்கள் தீப்பற்றி எரிந்து இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த அதிர்ச்சிகரமான மோதலின் வேகத்தில், இரண்டு பைக்குகளும் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கின.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த கோர விபத்தில் பைக்குகளில் பயணித்த வேலு (27) மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி (30) ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் தீப்பற்றி எரிந்த வாகனங்களில் இருந்து ஏராளமான செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டது அப்ப பகுதியில் பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களா அல்லது ஏதேனும் சட்டவிரோதக் கடத்தலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் மாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.