பிறப்பு, இறப்பு பதிவு விதிகளில் புதிய மாற்றம்! அக்.1 முதல் அமல் - 2 ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கும்?
Sep 18, 2026, 10:57 IST
பிறப்பு மற்றும் இறப்பு பதிவில் தாமதம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2026, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ளார்.பிறப்பு அல்லது இறப்பு சம்பவங்களை உரிய காலத்தில் பதிவு செய்வதை ஊக்குவிப்பதும், நீண்ட காலத்துக்குப் பிறகு பதிவு செய்யப்படும் நிகழ்வுகளில் கூடுதல் சரிபார்ப்பை கொண்டு வருவதும் இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டுக்கு மேல், 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்பட வேண்டுமெனில், மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவு தேவைப்படும்.மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பு அல்லது இறப்பு குறித்த தகவல்களின் சரியான தன்மையை சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணமும் செலுத்த வேண்டும்.
முடியும். ஆனால் இனி நடைமுறை கடுமையாகிறது.பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது, முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் (Judicial Magistrate First Class) உத்தரவு கட்டாயமாகிறது. இதன் மூலம் நீண்ட கால தாமதமான பதிவுகளுக்கு கூடுதல் நீதித்துறை ஆய்வு கொண்டுவரப்படுகிறது.

